கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தில் சீரமைப்பு பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      தமிழகம்
23 kaja news

சென்னை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணியாளர்களை ஊக்கப்படுத்தினர்.

நேரில் ஆய்வு...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் , வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அறிவுறுத்தல்...

புஷ்பவனம் கிராமத்தில் புயலால் சேதமடைந்துள்ள தென்னை, மா, முந்திரி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பையர் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் ரேவதி உள்ளிட்ட தன்னார்வலர்கள், புஷ்பவனம் கிராம பொதுமக்கள் மற்றும் மீனவ மக்கள் ஆகியோரை சந்தித்து, பணிகளை விரைந்து முடிக்க ஊக்கப்படுத்தினர். விவசாய நிலங்களில் புயலால் சாய்ந்து விழுந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்திட தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கப்படும். எனவே கணக்கெடுப்பு முடிவுற்ற இடங்களில் விவசாயப் பெருமக்கள் மரங்களை அப்புறப்படுத்தி, மறு சாகுபடி செய்வதற்கு தயாராக வேண்டும் என தெரிவித்தனர்.

முன்வர வேண்டும்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் மறுவாழ்வுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளித்திட முன்வர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கச் செய்யும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு கணக்கெடுப்பு விவரங்கள் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து