முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது: கவாஜாவை கிண்டலடித்த ரிஷப் பந்த்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்டில் அணியை காப்பாற்றும் வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா வீரர் கவாஜாவை ரிஷப் பந்த் கிண்டல் செய்துள்ளார்.

புஜாரா அசத்தல்

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணியில் புஜாரா தவிர்த்து மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். புஜாரா நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புஜாரா, 153 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் 231 பந்தில் சதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை திறமையான எதிர்கொண்டு அணியை காப்பாற்றினார். புஜாரா 123 ரன்கள் அடித்ததால் இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்தது.

கவாஜா தடுப்பாட்டம்

பின்னர் 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலயா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரின் துள்ளியமான பந்து வீச்சை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் திறமையாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது. இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

28 ரன்களுடன்...

125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கையுறையில் (Glove) உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

ஸ்லெட்ஜிங்கில்...

கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் ரிஷப் பந்த் ஸ்லெட்ஜிங்கை தொடங்கி வைத்துள்ளார். வரும் நாட்களில் இரு அணி வீரர்களும் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து