முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 2116 வழக்குகளுக்கு தீர்வு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை,- தேசிய சட்ட பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பெயரிலுமஇ; சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு  மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகளும் வங்கி; கடன் நிலுவை சம்பந்தப்பட்ட- நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத  வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி மு.ஏ.செந்தூர் பாண்டியன் மாவட்ட கூடுதல் நீதிபதி தணியரசு  குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் முதன்மை  குற்றவியல் நீதிதுறை நடுவர் ராதிகா  சார்பு நீதிபlதி,மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர் வடிவேலு சார்பு நீதிபதி செல்வகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன் மற்றும் குற்;றவியல் நீதித்துறை நடுவர் லலிதாராணி ஆகியோர் சிவகங்கை நகரிலுள்ள வழக்குகளை விசாரித்தனர். அவர்களுடன் வழக்கறிஞர்கள்
ராஜசேகரன், கோபால், சோமநாதன் ராமலிங்கம், விஜயஜோதி, மற்றும்; மு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர். இதில் 1958 குற்ற வழக்குகளும், 60 செக் மோசடி வழக்குகளும், 120 வங்கிக் கடன் வழக்குகளும்; 258 வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும்,  50 குடும்பப் பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 140 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 2586 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 2020 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3,95,87,321 -  வரையில் வழக்காளிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கி; கடன் நிலுவை சம்பந்தப்பட்ட - நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத,  வழக்குகளில் 2350 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு  96 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.78,60,000,- வரையில் வங்கிகளுக்கு வரவானது.  இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் நிர்வாக அதிகாரிகள்  மணிமேகலை  பானுமதி மற்றும் சட்டப் பணிகள் தன்னார்வலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து