முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி,-  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப.,  முன்னிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி, அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி சமுதாயக்கூடம், வீரசின்னமாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, அய்யனார்புரம் சமுதாயக்கூடம், பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, சத்தியநாதபுரம் மேல்நிலைத்தொட்டி அருகில், கோவிந்தநகரம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில்   பொதுமக்களை நேரடியாக சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
 தமிழ்நாடு துணை முதலமைச்சர்  அரண்மனைப்புதூர் ஊராட்சி, கோவிந்தநகரம் ஊராட்சிக்குட்பட் கிராமப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் பெண்கள் பொது கழிப்பறை, போக்குவரத்து வசதி, சமுதாயக்கூடம், முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையோரம் படித்துறை அமைக்க வேண்டி மனுக்கள் அளித்தனர். மனுக்களை  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  பெற்றுக்கொண்டதோடு, மேற்கண்ட மனுக்கள் குறித்து அமைவுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
மேலும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் , கிராமத்தின் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுதிவாய்நத மனுதாரர்களுக்கு அரசின் பயன் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 தமிழ்நாடு துணை முதலமைச்சர்  பேசும் போது தெரிவிக்கையில்,  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு 2011-ஆம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் பொதுமக்களின் குறைகளைவதற்கு பொதுமக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, தற்போது போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புறப்பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படும் என  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.
இந்நிகழ்வின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, செயற்பொறியாளர் எம்.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அசோகன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, பொதுப்பணித்துறை (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம் சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், வட்டாட்சியர் என்.சத்தியபாமா,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.கோவிந்தராஜ், கே.சுபாஸ்சந்திர போஸ் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து