முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழ்நாள் தடையை நீக்கக் கோரி வழக்கு: அசாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீசாந்த் கேள்வி

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்று வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூதாட்ட புகார்...

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது புகார் எழுந்தது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

ஸ்ரீசாந்த் வழக்கு

இதையடுத்து தனது வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அப்பீல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் வந்தது.

கவுண்டி அழைப்பு

அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சல்மான் குர்ஷித், ‘ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. அவருக்கு இப்போது 36 வயது. அவரால் இனி உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாது. இப்போது, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரை அதில் ஆட அனுமதிக்கவில்லை என்றால் அந்த வாய்ப்பும் பறிபோகும். அதனால் இடைக்கால தடையாவது விதித்து அவரை விளையாட அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

என்ன நியாயம் ?

அவர் மேலும் கூறும்போது, ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை விடுவிக்கப்பட்டது. அவரை ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்ன நியாயம் என்றும் அவர் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை யை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து