முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார் எதிரொலி: ஒடிஸா காப்பகங்களில் ஆய்வு நடத்த மேனகா காந்தி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஒடிஸா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்துவதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மேனகா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ""சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை விவகாரத்தோடு தொடர்புடைய அதிகாரிகள் இதற்கு தார்மீக ரீதியாக கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தையும், அமைச்சக செயலாளரையும் வலியுறுத்தியிருக்கிறேன். மேலும், ஒடிஸாவில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் உடனடியாக ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் அறிவுறுத்தியிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒடிஸாவின் தென்கனல் மாவட்டம் பெலிடிகிரி கிராமத்தில் டிரீம் சென்டர் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த வாரம், இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற சிறுமிகளிடம் அதன் நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், அவர்களைத் தாக்கினர்.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுகிழமை காப்பகத்திற்கு "சீல்' வைக்கப்பட்டதுடன் அதன் நிர்வாகி பயாஸ் ரஹ்மான் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து