முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கட்சி கூட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யாரென்று சொல்ல முடியுமா?: பா.ஜ.க.

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதும், பிரதமர் மோடியை வெளியேற்றுவதும் இருக்கட்டும். முதலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அவர்களால் கூற முடியுமா என்று எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கிண்டல் செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் குஷ்வாலா வெளியேறியுள்ளார். இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் குறித்து பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகையில்,

எதிர்க்கட்சிகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்று திரள்வது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முதலில் எதிர்க்கட்சிகள் தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும். எங்களிடம் பிரதமர் மோடி உள்ளார். எதிர்க்கட்சிகள் யாரைப் பிரதமராக நிறுத்தப் போகிறார்கள் எனக் கிண்டல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து