முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கு அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இதனிடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

பேச்சுவார்த்தை...

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவகுமார், இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாகக் கடலில் நீர் கலப்பதைத் தடுக்கவே புதிய அணை கட்டப்படுவதாகவும் தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள், நண்பர்கள், அவர்களுடன் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் நிலையில் சண்டையிட விரும்பவில்லை என்றும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

அமைச்சர் கடிதம்...

இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அமைச்சர் சிவகுமாருக்கு பதிலளித்து தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் இதை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் சுப்ரீம கோர்ட் தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை இல்லை என்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கைத் தாமதப்படுத்தவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து