முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, வனத்துறையில், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக 2010-11 மற்றும் 2013-14-ம் ஆண்டுகளுக்கான “முதலமைச்சர் விருது”-க்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை 26 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முதலமைச்சர் விருது

வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு, வன உயிரினங்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல், வன ஆராய்ச்சி, வன மேலாண்மை, வன அபிவிருத்தி, பசுமை பரப்பினை வனத்திற்கு வெளியே அதிகரித்தல், சூழல் சுற்றுலா, சிறந்த வேளாண் வனவியல் மாதிரிகள் / சிறந்த நடைமுறைகள், வனவியல் கல்வி மற்றும் பயிற்சி, வன ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தல், வனக் கடத்தல் தடுப்பு, வனத் தீ தடுப்பு போன்ற பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொள்ளும் வனக் காவலர், வனக் காப்பாளர், வனவர், வனச்சரக அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், துணை வனப் பாதுகாவலர், மாவட்ட வனப் பாதுகாவலர் ஆகிய வனத்துறை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் “முதலமைச்சர் விருது” வழங்கப்படுகிறது. இவ்விருதுடன், வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர்களுக்கு 2000 ரூபாயும், வனவர் மற்றும் வனச் சரகர் அலுவலர்களுக்கு 3000 ரூபாயும், உதவி வனப் பாதுகாவலர்களுக்கு 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

26 வனத்துறை...

அந்த வகையில், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய வனத்துறை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2010-11-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருதிற்கு 14 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 2013-14-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருதிற்கு 12 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், என மொத்தம் 26 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) டாக்டர் எச்.மல்லேசப்பா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ரகுநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து