முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசனே புஜாராதான் - விராட் கோலி

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் இந்திய அணி 307 எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் புஜாரா 71 ரன்கள் மற்றும் ரஹானே 70 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய லையான் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் ஆல் அவுட் ஆகி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது.

பின்னர் பேசிய விராட் கோலி “ஒரு போட்டி என்பது ஏற்றம் மற்றும் தாழ்வு என்ற இரண்டையும் கொண்டது என்பதை இந்த டெஸ்ட் உணர்த்தியது. அதேசமயம் போட்டி எப்படி ஒரு நிலையில் சென்றுகொண்டிருந்தாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக போராடினர். இருந்தாலும் நாங்கள் எங்கள் திட்டத்தை தெளிவாக வகுத்து இறுதி விக்கெட்டை கைப்பற்றினோம். போட்டியின் போது நான் கூலாக இருக்கிறேன் என்று சொல்லமுடியாத மனநிலையில் இருந்தேன். இருந்தாலும் அதை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

இறுதி ஓவரை வீசும்போது பும்ரா ஆவேசப்பட்டார். ஆனால் நான் அவரிடம் சொன்னது ‘ரிலாக்ஸ்’ ஆகு என்பதை மட்டும்தான். 2 இன்னிங்கிஸிலும் சேர்த்து 20 விக்கெட்டுகளை 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். அவர்களை நினைத்து உண்மையிலேயே பெரிய பெருமை கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தின் இளவரசனே புஜாராதான். முதல் இன்னிங்ஸில் அணியே சரிந்தபோது, அதை தடுத்து தூக்கியது அவர்தான். ரஹானேவும் சிறப்பாகதான் விளையாடினார்” எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து