முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைவிட, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டது. 

இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தின் பங்களிப்பும் அணியின் வெற்றிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. நெருக்கடியான தருணங்களில் அவர் முன்னணி பேட்ஸ்மேன்களை கேட் பிடித்து அவுட் ஆக்கினார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 கேட்ச், இரண்டாம் இன்னிங்சில் 5 கேட்ச் என 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார்.  1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேக் ரஸல் மற்றும் 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

தற்போது அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாப் டெய்லர் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), விர்திமான் சகா (இந்தியா)  ஆகியோர் 10 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து