முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த டெய்ல் எண்டர்ஸ்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இந்தியா 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மார்ஷ் 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் இருந்த நிலையில் 167 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன்களான பந்து வீச்சாளர்கள் களம் இறங்கிய தொடங்கினார்கள்.

முதலாவதாக பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார். இவர் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பெய்ன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பெய்ன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 136 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுக்கள் மட்டுமே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர். 8-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் இணைந்த ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஸ்டார்க் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் ஆட்டமிழக்கும்போது 95 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் 9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் கடும் சவாலாக விளங்கி வரும் நிலையில், கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்தது. இக்கட்டான நிலையில் கம்மின்ஸை வெளியேற்றினார் பும்ரா. அப்போதுதான் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. இருந்தாலும் இந்தியாவின் நெருக்கடி குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லாயன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹசில்வுட் திறமையான வகையில் சமாளிக்க, நாதன் லயன் இலக்கை நோக்கி ரன்களை விரட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் இஷாந்த சர்மா பந்தில் நாதன் லயன் எல்பிடபிள்யூ ஆக, நடுவர் நோ-பால் என்றதால், இந்திய வீரர்கள் விரக்தியடைந்தனர்.

ஸ்கோர் 54-ல் இருந்து 44, 34 என குறைந்து கொண்டே வந்தது. இதனால் ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில் அஸ்வின் பந்தில் ஹசில்வுட் 43 பந்துகளை சந்தித்து 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 291 ரன்னில் ஆல்அவுட் ஆகி, 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது. 2-வது இன்னிங்சில் அஸ்வின் (5), இஷாந்த் சர்மா (0), முகமது ஷமி (0), பும்ரா (0) ஆகியோர் 44 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 255 பந்துகளை சந்தித்து 107 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்ததோடு, நெருக்கடியும் அளித்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து