முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில், நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகர் சந்தீப் வெல்லலுார், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் ரஸ் அல் கைமா நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூக சேவகர், சந்தீப் வெல்லலுார் வசித்து வந்தார். இவர், ரஸ் அல் கைமா நகரில் பல முறை ரத்த தான முகாம்களை நடத்தி உள்ளார். மேலும் இவர், 2017-ல், அந்த நகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். இவரது மனிதாபிமான சேவையை பாராட்டி பல அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்து உள்ளன. இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சமீப காலமாக அவர் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து