முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 20 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனி பறிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் அறிவுறுத்தினர்.

தேர்தல் பொறுப்பாளர்கள்...

அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து 18 தொகுதிகளுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி, திருவாரூர் தொகுதிகளில் காலியான இடங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. சார்பில் அத்தொகுதிகள் அனைத்திற்கும் முதல் முதலாக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் அறிவித்தனர். அந்த தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் இப்போது களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்...

இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 20 தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலிலும், பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுறுத்தினர்.

நிர்வாகிகள் பங்கேற்பு...

இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் கே.ராஜ் சரோஜா, செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், பாண்டியராஜன், கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, ஆகியோரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ராஜகண்ணப்பன், வளர்மதி மாவட்ட செயலாளர்கள், வெங்கடேஷ்பாபு, எம்.பி. விருகை ரவி, தி.நகர் சத்யா, பாலகங்கா பங்கேற்றனர்.

முன்னதாக அ.தி.மு.க. சார்பில் பெரம்பூர் பகுதி அ.தி.மு.க.வினர் 14 பேருக்கு இலவச ஆட்டோக்களை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து