முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அனைத்துக்கட்சி கூட்டம்...

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அவ்வகையில் நேற்று குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை கோரும் வகையில் மத்திய அரசு நேற்று முன்தினம் நடந்த டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஒத்துழைப்பு நல்க...

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கட்சிகள் எழுப்பும் தேசநலன் சார்ந்த பிரச்சினைகளை அரசு வரவேற்கும் என்று கூறிய அவர், பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்துமாறும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதைப்போல மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு கேட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் கூட்டி இருந்தார்.

அவை ஒத்திவைப்பு...

இந்த கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. இன்று முதல் வழக்கம்போல் அலுவல்கள் நடக்கும்.

20 அமர்வுகள்...

அடுத்த மாதம் (ஜனவரி) 8-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து