முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரின் டிரைவர் மற்றும் ஒரு பெண் பலியாகினர்.
 திண்டுக்கல் இந்திராநகரைச் சேர்ந்தவர் திருவாசகம் இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வீரமணி (30) இவர் தனது உறவினரின் காரில் பழனி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். காரை திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த நாகப்பன் (டிரைவர்) ஓட்டிச் சென்றார். பழனியில் சாமி கும்பிட்டுவிட்டு, நேற்று மதியம் சுமார் 3.00 மணியளவில் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து காரில் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில், டிரைவர் நாகப்பனும், உடன் வந்த வீரமணியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தை அறிந்த அரசு பேருந்து ஓட்டுனர் தப்பியோடிவிட்டார்.  இவ்விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இவ்விபத்தால் திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து