முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்டும் விவகாரம்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு - இரு அவைகளும் முடங்கின

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.  எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளும் முடங்கின.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  செவ்வாயன்று தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று 2-வது நாள் கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வலியுறுத்தல்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்ற இரு அவைகளிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது.

மாநிலங்களவை தொடங்கி சிறிது நேரத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக கோஷங்களை எழுப்பினார்கள். அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

கூச்சல் - குழப்பம் ...

இதனால், அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியது. அப்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பல்வேறு கட்சிகள் முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச நோட்டீஸ் அளித்துள்ளதால் அது குறித்துப் பேச வேண்டும். ஆதலால், அமைதியாக இருக்கையில் அமருங்கள் என்று எம்.பி.க்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், மற்ற விவகாரங்களை ஒத்திவைத்து விட்டு காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவைத் தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

நண்பகல் வரை...

ஆனால், விதி 267-ன் கீழ் எந்த விவகாரத்தை உடனடியாக எடுக்க முடியாது. அனைத்து விவகாரங்களும் முறைப்படிதான் விவாதிக்க முடியும். ஆதலால், உறுப்பினர்கள் இருக்கையில் அமரலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஆனால், அதற்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். பின் அவை மீண்டும் கூடியதும் கூச்சல் குழப்பம் தொடர, அவையை நாள் முழுவதும் ஒத்துவைத்து உத்தரவிட்டார்.

மக்களவையில்...

அதேபோல் மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதேபோல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், ராமர் கோவில், விசாகப்பட்டினம் ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து