முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விரிவான அறிக்கை தயாரிக்க தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு, நீர்வள ஆணையம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து