முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி - நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.484 கோடியில் சாலைகள் - ஆற்றுப்பாலங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிமற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.484 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 3 சாலைகள், புதிதாக கட்டப்பட்டுள்ள 2 ஆற்றுப்பாலங்கள், கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி...

தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில்பட்டி, திட்டகுளண் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி -கோவில்பட்டி - எட்டையாபுரம் - விளாத்திக்குளம் - வேம்பார் சாலைப்பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

திருநெல்வேலி...

மேலும், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - பரதந் உவரி கிழக்கு கடற்கரை சாலைசந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி, சீதைக்குறிச்சி - வாள்வீச்சு ரம்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், விழுப்புரம் மாவட்டம், கடலூர் - சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

ஆற்றுப்பாலங்கள்...

திருச்சி மாவட்டம், சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து