முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த வாரம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் என்.வி.ராதா, நகர துணை செயலாளர் அப்துல்சமது, நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா கலந்து கொண்டு 700க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சிவசங்கரிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவில் அதிமுக நகர துணை செயலாளர் அப்துல்சமது உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து