முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் 50 நாட்களுக்கு சண்முகாநதி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை  14.12.2018 முதல்  50 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

50 நாட்களுக்கு...

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த 1640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 62.69 மி.கன அடி தண்ணீரை சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 14.12.2018 முதல் 50 நாட்களுக்கு திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

8 வருவாய் கிராமங்கள்

இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாவுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும்  சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்கள் பாசன வசதிபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து