முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

புது டெல்லி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன். விரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. முதல்வர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

பொறுப்பு ராகுலுக்கு

ராஜஸ்தானில் முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதேபோன்று  மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்,  ஜோதிர் ஆதித்யா சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது. சத்தீஷ்காரில் டாம்ரத்வாஜ் சாகு என்ற எம்.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல்-மந்திரி பதவி போட்டியில் அவரும், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேலும், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவும் உள்ளனர். மூன்று மாநிலங்களிலும் முதல்-மந்திரி தேர்வில் கடும் போட்டி நிலவுவதால் யாரை தேர்வு செய்வது என்ற பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சென்றுள்ளது.

விரைவில் அறிவிப்பு

இதற்கிடையே ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், மத்திய பிரதேசத்தில் கமல்நாத்திற்கும்,  சத்தீஷ்காரில் பூபேசுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வெற்றியில் இளம் தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கட்சி தலைமைக்கு பெரும் சவால் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக பேசுகையில்,  கட்சியின் பல்வேறு மட்டத்திலிருந்து கருத்துக்களை பெற்று வருகிறேன். நாங்கள் எம்.எல்.ஏ.க்கள் முதல் அடிப்படை தொண்டர்கள் வரையில் கருத்துக்களை பெறுகிறோம். நீங்கள் விரைவில் புதிய முதல்வர்களை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து