முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, தஞ்சை பெரிய கோயிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் தியான நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.  இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்த ஐகோர்ட் மதுரைக் கிளை, மத்திய தொல்லியல்துறை அதிகாரி 13-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை சார்பில், கோயில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோயிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் யார் பஜனை நடந்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது ஏற்கதக்கதல்ல, தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியமானது என்பதால் நீதிமன்றம் தலையிடுகிறது என்று கூறியது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து