முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சீர்வரிசை பொருட்களை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி,- தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில்  மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நேற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகளுக்கான பொருட்களை வழங்கி விழாவினை நடத்தி வைத்தார்.
விழாவினை தொடங்கி வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது:-
அம்மாவின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பதவி, சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. கருவுற்ற காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு சமுதாய வளைகாப்பு என்னும் சமுதாய விழிப்புணர்வு விழா பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுகிறது.
 அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 1400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர் வரிசைகள் மற்றும் 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.  பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும், இரண்டு குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்வதை ஊக்கப்படுத்திடும் வகையிலும் தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. 
பணிக்கு செல்லும் மகளிர்கள் தங்களது இல்லப் பணிகளையும், அலுவலகப் பணிகளையும் விரைந்து மேற்கொள்வதற்காக தமிழக அரசால்  உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர்.
தாய், சேய் நலனை மேம்படுத்திடவும், ஏற்றதாழ்வின்றி அனைத்து சடங்குகளும் அனைவருக்கும் கிடைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மனமகிழ்ச்சி அடைவதற்கும், சத்தான உணவுகளை உட்கொள்ளுவதற்கு தமிழக அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது 1,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதுவரை கடந்த 5-ஆண்டுகளில் 6,800 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் அறிவுரைகளை பெற்று சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
நமது மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களையும் நவீனமயமாக்கிடும் பொருட்டு ரூ.64.43 லட்சம் மதிப்பீட்டில் குக்கர், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்பு, மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.18.61 லட்சம் மதிப்பீட்டில் கடாய், கரண்டி, தட்டு, டம்ளர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.1,000 மதிப்பிலான மருத்துவப்பெட்டிகள் ரூ.10.34 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், கம்பம் எம்.எல்.ஏ. எஸ்.டி.கே.ஜக்கையன், முன்னாள் எம்.பி. சையதுகான், உதவி ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, உத்தமபாளையம் சார் ஆட்சியர் வைத்தியநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயலட்சுமி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  சாந்தி, உதவி ஆணையாளர் (கலால்) ஆர். ராஜா, உதவி திட்ட அலுவலர் தண்டபானி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, தேனி வட்டாட்சியர் சத்தியபாமா, தலைமையிடத்து வட்டாட்சியர் சுகந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ், தனலட்சுமி, மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து