முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் 7 பேர் நேற்று ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இடைக்காலத் தடை

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ம் தேதி நியமித்தார். அப்போதிலிருந்து, இலங்கை அரசியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்களும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன. நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஜனவரி மாதம் 5-ம் தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்த இலங்கை உச்சநீதிமன்றம், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச மனு தாக்கல் செய்தார். அதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டி, ரணில் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதனன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றுள்ளார். இது அந்நாட்டு அதிபர் சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோதம்...

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ள்ளது. இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 அமைப்புகள் தொடந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் வியாழன்று ஒருமித்த தீர்ப்பு வழங்கினார். அதில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்திற்கு விரோதம் என்றும், அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவின் உத்தரவு செல்லாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து