முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கவுகாத்தி : உலகக்கோப்பை ஹாக்கி தொடர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

பெனால்டி வாய்ப்பு

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 11-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஹர்மன்பிரீத் பந்தை எடுத்து தர ஆகாஷ்தீப் அதை கோலாக மாற்றி இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார்.

3-வது கால் பகுதி...

ஆனால், 15-வது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி கோல் அடித்து சமன் செய்தது. இதனால் முதல் கால் பகுதி ஆட்ட முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. ஆனால், 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால், முதல் பாதி ஆட்ட நேர முடிவு வரை 1-1 என்ற சமநிலை நீடித்தது.  இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், 3-வது கால் பகுதி ஆட்டம் வரை கோல் எண்ணிக்கை கூடவில்லை.

இந்தியாவுக்கு நெருக்கடி...

விறுவிறுப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக்கொண்ட அந்த அணி கோல் அடித்து போட்டியின் முக்கியமான கட்டத்தில் 2-1 முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பிறகு, நெதர்லாந்து அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கோலாக மாறவில்லை. இதனால், நெதர்லாந்து 2-1 என முன்னிலையிலேயே நீடித்தது.

வெளியேறியது...

போட்டியின் கடைசி 5 நிமிடத்தில் கோல் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆனால், இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்திலும் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து