முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாள அரசு திடீர் தடை விதிப்பு

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, இந்திய அரசின் ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் தங்கள் இந்தியாவின் உயர்ந்த மதிப்பு கொண்ட நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தி காத்மாண்டு போஸ்ட் நாளேட்டுக்கு நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோடா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நேபாளத்தில் இந்திய அரசின் ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கையில் வைத்திருக்கவும் வேண்டாம். மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார். ஆனால், எதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள அரசு திடீரென தடை செய்துள்ளது என்பதற்கான காரணத்தை அவர் கூற மறுத்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து