முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு கேரளா உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டதாக ரெஹானா பாத்திமா மீது ராதாகிருஷ்ண மேனன் என்பவர் கேரள மாநிலம், பத்தனம்திட்டா காவல்நிலையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதரீதியிலான உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் அவமரியாதை அளிப்பது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 295ஏ பிரிவின்படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ரெஹானா பாத்திமாவை காவல்துறையினர் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் ரெஹானா பாத்திமாவுக்கு கேளரளா உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்ய அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ரெஹானாவும், ஹைதராபாதைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா என்பவரும் சபரிமலைக்குக் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி சென்றனர்.

இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து