முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு: துணை முதல்வராக சச்சின் பைலட்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இது குறித்து சோனியா மற்றும் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுடனும் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சச்சின்பைலட் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவரே மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வார் என்றும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து