முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை கேப்டனாக மலிங்கா நியமனம்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி...

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடரும் நடைபெற இருக்கிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மூத்த வீரர் மலிங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1.மேத்யூஸ், 2. குணதிலகா, 3. குசால் பேரேரா, 4. சண்டிமல், 5. குணரத்னே, 6. குசால் மெண்டிஸ், 7. டி சில்வா, 8. டி பெரேரா, 9. சண்டகன், 10. சீக்குகே பிரசன்னா, 11. சமீரா, 12. ரஜிதா, 13. நுவான் பிரதீப், 14. குமாரா, 15. மலிங்கா, 16. டிக்வெல்லா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து