முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிற்கு அகதியாக சென்ற போது போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட 7 வயது கவுதமாலா சிறுமி உயிரிழந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

டெக்சாஸ் : அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கவுதமாலாவைச் சேர்ந்த சிறுமி ஜாக்லின் கால் மற்றும் அவரது தந்தை நேரி ஹில்பெர்டோ கால் கஸ் ஆகியோர் கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் வேண்டி சக அகதிகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் நோக்கி சிறுமி ஜாக்லின் கால் மற்றும் அவரது தந்தை நேரி ஹில்பெர்டோ கால் கஸ் சென்றனர். எல்லையை அடைய 90 நிமிடங்களே இருந்தன. அதற்கு முன் எல்லை ரோந்து போலீசரால் இருவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு மொழி தெரியாததால் பதில் கூற முடியாமல் திணறினர். பின்னர், தந்தையையும், மகளையும் விசாரணை அழைத்துச் சென்றனர்.

பசி மயக்கத்தில் இருந்த சிறுமி ஜாக்லின் காலை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு உணவு எதுவும் தராமல் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த சிறுமி திடீரென உயிரிழந்தார்.

சிறுமியின் உயிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவுதமாலா துணை தூரக அதிகாரிகள், உடலை சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தனர்.தஞ்சமடைய தந்தையுடன் சென்ற சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சிறுமியை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து