முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நிரூபித்தால் ரூ.72 லட்சம் பரிசு - தனியார் நிறுவனத்தின் விநோத அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ. 72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அந்த வகை போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப் செய்து அதனை டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் கேள்விக்கான பதில்களுடன்  ஹேஷ்டேக் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.

வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதிக்குள் தங்களது பதில்களை பதிவிட வேண்டும். நிறுவனத்தின் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல்போன் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒரு ஆண்டிற்கு அதாவது 365 நாட்களுக்கு நிறுவனம் வழங்கும் போனை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

இவை தவிர லேப்டாப், டெஸ்கடாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும் ஸ்மார்ட்போன், டேப்லெட் களை பயன்படுத்த கூடாது. போட்டியாளர்கள் ஜனவரி மாதம் 22-ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும்.

ஒரு ஆண்டு முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை அந்நிறுவனம் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனைக்குப் பின்பே பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து