முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிள் பேரணி தொடர்பான ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள அம்மா அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறிடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மாபெரும் சாதனை விளக்க சைக்கிள் பேரணி கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இதையடுத்து சாதனை விளக்க சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கள்ளிக்குடி சத்திரத்திலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டங்களுக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர்,ஆவின் டைரக்டர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவரும்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மனுமான தமிழழகன் வரவேற்றார்.பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டங்களில் கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியில் பங்கேற்கவுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனகளையும்,அறிவுரைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,இணை செயலாளர்கள் பஞ்சம்மாள்,பஞ்சவர்ணம்,மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவல்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திருப்பதி,போத்திராஜா,மாவட்ட எம்ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைசெயலாளர் சுமதிசாமிநாதன்,அவைதலைவர் அன்னகொடி,புளியங்குளம் கிளைகழகச் செயலாளர் கட்டாரி வேல்முருகன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,முன்னாள் கள்ளிக்குடி துணை சேர்மன் கண்ணன்,சிவன்காளை,கட்சி நிர்வாகிகள் சிவஜோதி தர்மர்,அழகர்,பிச்சைமணி,முருகன் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து