முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 578 ரன்கள் குவிப்பு

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் 121 ரன்னும், ராஸ் டெய்லர் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய டாம் லாதம் அபாரமாக விளையாடி டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 412 பந்துகளில் 16 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை எடுத்தார். இரட்டை சதம் அடித்த 16-வது நியூசிலாந்து வீரர் ஆவார்.

ஒருபக்கம் டாம் லாதம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்ததால் நியூசிலாந்து அணி 578 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. லாதம் 264 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 489 பந்துகளில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். இதன்மூலம் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த 6-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை லாதம் பெற்றார். மெக்கல்லம் (302 ரன்), மார்ட்டின் குரோவ் (299), ராஸ் டெய்லர் (290), ஸ்டீபன் பிளமிங் (274), பிரையன் யங் (264) ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 20 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 276 ரன்கள் தேவை என்பதால் இலங்கையின் தோல்வி உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து