முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மார்கழி மாதம் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாக வைணவ திருத்தலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் அனைத்து பெருமாள் திருத்தலங்களிலும் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படும். திண்டுக்கல் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் காலை 4 மணிக்கு திருமஞ்சனம், உஷஞீஜை, ஆழ்வார் புறப்பாடுக்கு பின் 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கருட வாகனத்தில் எழுந்தருளிய சௌந்தர்ராஜ பெருமாள் பரமபத வாசலை கடந்து வந்து போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பக்திப் பெருக்குடன் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பெருமாள் கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், எம்.வி.எம். நகர் தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில், வடமதுரை சௌந்தர்ராஜ பெருமாள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள், பழனி லட்சுமி நாராயண பெருமாள், நாகல்நகர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சொர்க்கவாசல்திறப்பு நடைபெற்றது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து