முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு அடுத்து நியூஸிலாந்து பயணம்: இந்திய அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்திய அணி அடுத்து நியூஸிலாந்து பயணம் மேற்கொள்கிறது. அங்கு, 5 ஒருநாள், 3 டி-20
போட்டிகளில் பங்கேற்று ஆடுகிறது.

பாக்சிங் டே டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஆடிவருகிறது,  மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடர் ஜனவரி 18-ம் தேதி 3வது ஒருநாள் போட்டியுடன் நிறைவடைகிறது.

நியூஸிலாந்துக்கு...

இந்திய ஒருநாள், டி20 அணி இந்தியா திரும்பவில்லை, மாறாக நியூஸிலாந்துக்கு அப்படியே பயணம் மேற்கொண்டு முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

போட்டி விவரம் வருமாறு:

போட்டி -  தேதி -   இடம் -   நேரம்

1) முதல் ஒருநாள் போட்டி  - ஜனவரி 23 -  நேப்பியர் (இந்திய நேரம் காலை 7.30).
2) 2-வது ஒரு ஒருநாள் போட்டி - ஜனவரி 26 - மவுண்ட் மவுங்கனி - (காலை 7.30).
3) 3-வது ஒருநாள் போட்டி - ஜனவரி 28 -  மவுண்ட் மவுங்கனி - (காலை 7.30).
4) 4-வது ஒருநாள் போட்டி - ஜனவரி 31 - ஹேமில்டன் -(காலை 7.30).
5) 5-வது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 3 - வெலிங்டன் -(காலை 7.30).

டி- 20 போட்டிகள்:

1) பிப்.6 - முதல் டி- 20 - வெலிங்டன் - (இந்திய நேரம் நண்பகல் 12.30).
2) பிப்.8 - 2 - வது டி20  - ஆக்லாந்து  - (இந்திய நேரம் நண்பகல் 11.30).
3) பிப்.10 - 3-வது ஒருநாள் - ஹேமில்டன் (காலை 12.30).

போட்டிகள் அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது. ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ஒளிப்பரபாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து