முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்னில் 37 ஆண்டு கால ஏக்கத்தை தணிக்குமா இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுகள் வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி இந்த தடவை அந்த ஏக்கத்தை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் வருகிற 26–ந்தேதி தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. இந்திய அணி மெல்போர்னில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2–ல் வெற்றியும், 8–ல் தோல்வியும், 2–ல் டிராவும் சந்தித்துள்ளது. மெல்போர்னில் இந்திய அணி வெற்றி பெற்று 37 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்தியா மட்டுமல்ல 1981–ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஆசிய அணியும் இங்கு சாதித்ததில்லை. 2014–ம் ஆண்டில் இந்திய அணி தோனி தலைமையில் ஆடிய போது, விராட் கோலி, ரஹானேவின் சதங்களின் உதவியுடன் ‘டிரா’ செய்தது. இந்த மைதானத்தில் டெண்டுல்கர், ஷேவாக், கோலி உள்பட 8 இந்திய வீரர்கள் செஞ்சுரி அடித்துள்ளனர். ஆனால் எந்த இந்தியரும் இரட்டை சதம் அடித்ததில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து