முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஉத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் மீது புதிய சந்தனம் பூசப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதிய சந்தனம் பூசப்பட்டது.
    ராமநாதபுரத்தை அடுத்துள்ள புகழ்வாய்ந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் அமைந்துள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒளி ஒலி அதிர்வுகளால் பாதிக்கப்படும் என்பதற்காக ஆண்டுமுழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்தினம் சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இதன்படி நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசன முதல்நாள் விழாவையொட்டி நடராஜன் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை ஆருத்ரா தரிசன விழாவையொட்டி அதிகாலை 4 மணி அளவில் அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சந்தனம் பூசப்பட்டது.
       இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா தீபாரதனை நடைபெற்றது. மரகத நடராஜருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் மனோரஞ்சித மலர் மற்றும் செண்பக மலர் சூடப்பட்டது. இதனை தொடர்ந்து நடராஜருக்கு பல்வேறு தீபாரதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருஉத்தரகோசமங்கைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து