முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

700 நாட்கள் 7,546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி டிரம்ப் சாதனை: வாஷிங்டன் போஸ்ட்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், 700 நாட்களில் 7,546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் சாதனை படைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

டிரம்ப், அதிபராக பதவியேற்ற முதல் 8 மாதங்களில் நாளொன்றுக்கு 5 பொய்கள் வீதம் 1,137 குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நிகழ்ந்த சமயத்தில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் வீதம் நாளொன்றுக்கு 39 என்ற வீதம் அதிகரித்து அவர் , அன்றைய காலகட்டத்தில் மட்டும் 1,205 ஆதாரமற்ற மற்றும்  தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

தி பேக்ட் செக் டேடாபேஸ் என்ற நிறுவனம், டிரம்பின் அதிபர் தேர்தல் பிரச்சார உரை, அவரது ஆதரவாளர்களிடையே நிகழ்த்திய உரைகள் என அவரது பல்வேறு உரைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அவரது ஒவ்வொரு உரையிலும், 35 முதல் 45 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அப்போதே இருந்ததாகவும், அதிபரான பிறகு உள்ளூர் ஊடகங்களிலும் அவர் அதே நிலையையே தொடர்ந்து பின்பற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018, டிசம்பர் 20-ம் தேதியுடன், டிரம்ப் அதிபராக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவர் இதுவரை 7,546 தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 10 பொய் குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். 184 பொய்குற்றச்சாட்டுக்களை திரும்ப திரும்ப கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து