முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல்: கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதையடுத்து  கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்தார்.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற  மெக்சிகோவிடம் நிதி கேட்டார். ஆனால் அந்த நாடு தர மறுத்து விட்டதால் உள்நாட்டு நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் உள்ளார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி குடியரசு கட்சி செலவின மசோதாவை நிறைவேற்றி விட்டது. ஆனால் செனட் சபையில் போதிய பலம் இல்லாததால் செலவின மசோதா நிறைவேறவில்லை. இதன் காரணமாக 9 துறைகள் செயலிழந்துள்ளன. இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் டிரம்ப் அரசுக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அமெரிக்காவில் முக்கிய துறைகள் செயல்படாமல் முடங்கி இருப்பது தொடர்கிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு புளோரிடா மாகாணத்துக்கு செல்லவிருந்த பயணத்தை டிரம்ப் ரத்து செய்து விட்டார். அவர் வாஷிங்டனில்தான் உள்ளார். இந்த பிரச்சினையில் சமரச பேச்சு வார்த்தை தொடர்கிறது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகிறார். ஆனால் டிரம்போ, அரசு துறைகள் முடக்கம் நீண்ட காலம் தொடரலாம் என எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து