முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து கோவிலாக மாறும் 30 வருட கால பழமையான அமெரிக்க சர்ச்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

போர்ட்ஸ்மவுத், அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள போர்ட்ஸ்மவுத்தில் 30 வருட சர்ச், இந்து கோவிலாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி நாராயணன் கோவிலாக இந்த சர்ச் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், சர்ச்சை முழுவதுமாக கோவிலாக மாற்றிய பிறகு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 5 சர்ச்சுகள் சுவாமி நாராயணன் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாகவும் , இப்போது இந்த சர்ச்சையும் சேர்த்தால் இது 6-வது என்றும் உலக அளவில் இது 9-வது சுவாமி நாராயணன் கோயில் என்றும் அகமதாபாத் மணிநகர் சேர்ந்த சுவாமிநாராயண் காடி சன்ஸ்தான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவிற்கு முன்னதாக கலிபோர்னியா, லூயிஸ்வில், பென்சில்வேனியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓஹியோஆகிய இடங்களில் இருந்த சர்ச்கள் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் லண்டனில் உள்ள ஒரு சர்ச்சும் , மான்செஸ்டரில் உள்ள சர்ச்சும் கோயிலாக மாற்றப்பட்டதாக சன்ஸ்தான் ஆன்மீக அமைப்பின் பகவத் பிரியதர் சுவாமி தெரிவித்துள்ளார்.

தற்போது வர்ஜீனியாவில் உள்ள சர்ச் ஏற்கனவே வழிபாட்டு தலமாக இருப்பதால் நிறைய மாற்றங்கள் செய்ய தேவையில்லை என்றும் வர்ஜீனியா ஹரி பக்தர்களுக்கு முதல் வழிபாட்டு தலம் என்று பகவத் பிரியதர் சுவாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து