முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஜகர்த்தா,  இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 282 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் சுனாமி ஏற்பட்டது. திடீர் என்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டது.

பல வீடுகளுக்குள், அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

 பெரிய சுனாமி அந்த தீவை தாக்கி உள்ளது. இந்தோனேசியாவில் சுனந்தா ஸ்டிரைட் என்ற பகுதியில் இந்த சுனாமி தாக்கி உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கரகட்டாவ் எரிமலை வெடித்த காரணத்தால் இந்த சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்த எரிமலை ஜாவா தீவிற்கு அருகில் இருக்கும் எரிமலை ஆகும். எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நில அடுக்கு நகர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி உருவாகி இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஜாவா தீவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் இந்த சுனாமி உருவாகி உள்ளது. இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகும். இந்தோனேசியாவின் பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளை இந்த சுனாமி தாக்கி உள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 282 பேர் பலியாகி உள்ளனர். முதலில்200 பேர் மட்டுமே பலியாகி இருந்தனர். ஆனால் மீட்பு பணிகள் தாமதமானதால் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்த்து வருகிறது.

இந்த சுனாமியில் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து