முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரணில் கட்சியினருடன் அதிபர் சிறிசேனா திடீர் பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு,  இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் நேற்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார்.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதையடுத்து நம்பிக்கையில்லை தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.ஆனால் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் ராஜபக்சே மூன்று முறை தோல்வி அடைந்தார்.   இந்த நிலையில் நேற்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபருக்கே பிரதமர் பதவி என்று குறிப்பிட்டார். அதன்படி வரும் 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்றம் கூடும், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இதில் ராஜபக்சேவிற்கு எதிராக முறைப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் நடக்கும் என்றும் அவர் கூறினார். இந்த முடிவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவான முடிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் 105 உறுப்பினர்களுடன் நேற்று அதிகாலை திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து