முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக 7 வயது சிறுவன்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக சேர்க்கப்பட்டு உள்ளான்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர். அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆர்ச்சி சில்லர் உடல்நிலை காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என தனது தந்தையிடம் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்க விரும்பிய அவனது தந்தை, இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி வருகிற 26-ம்தேதி (நாளை) மெல்போர்னில் நடைபெற இருக்கும் பாக்சிங் டே டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து