முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க இளைஞரணி செயலாளர் கவிராஜன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற அம்மா அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நிகழ்ச்சியின் போது தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் திருமங்கலம் நகர அ.ம.மு.க இளைஞரணி செயலாளர் டி.கவிராஜன் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி திருமங்கலம் நகர் அ.ம.மு.க இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் டி.கவிராஜன். இவர்  டி.டி.வி அணியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளாலும், முக்கிய நிர்வாகிகள் கொடுத்த சிரமங்கள் காரணமாகவும் இவர் கடந்த சில வாரங்களாக  அக்கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திருமங்கலம் நகரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்ட அம்மா அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் கவிராஜனும் அவரது ஆதரவாளர்களும்  கலந்து கொண்டனர். பின்னர் அ.ம.மு.க.விலிருந்து விலகுவதாக அறிவித்த கவிராஜன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது கட்சியில் இணைந்த கவிராஜனுக்கு  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். திருமங்கலம் தொகுதியில் டிடிவி தினகரன் அணியினைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்ஒருவர் பின் ஒருவராக அ.ம.மு.க.விலிருந்து வெளியேறி அ.தி.மு.க.வில் இணைந்து வருவதால் விரைவில் டிடிவி அணியினரின் கூடாரம் மொத்தமாக காலியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு நிகழ்ச்சியின் போது திருமங்கலம் நகர செயலாளர், நகர அர்பன் வங்கி தலைவர் ஜே.டி.விஜயன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், இணைச் செயலாளர்கள் பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, போத்திராஜ், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், மாவட்ட எம்ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆண்டிச்சாமி, நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம், ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி, துணைச் செயலாளர் சுகுமார், இணைச் செயலாளர் சுமதி சாமிநாதன், நிலவளவங்கி தலைவர் கபிகாசிமாயன், பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன், நகர் மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன், கட்சி நிர்வாகிகள் சுரேஷ், ராஜாமணி, அழகர், ரவி, நேதாஜி, பாலமுருகன், சிவனாண்டி, மாதவன், சிவகுமார், நாகையாசாமி, முத்துராஜா, வெங்கடேஸ்வரன், வாசிமலை, மரக்கடைராஜா, திருப்பதி, சின்னஇருளப்பன், செல்வம் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து