முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் தென் பகுதியில் தங்காலை குட வெல்ல என்ற துறைமுக நகரம் உள்ளது. நேற்று காலை 6.30 மணியளவில் அங்கு ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் 4 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 9 பேருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என தெரியவில்லை. கொலையாளிகள் பயன்படுத்தியது டி 56 ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் என போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து