முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் தலைமுறையினருக்கு பி.வி. சிந்து முன்னுதாரணம் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம், பாட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது இளம் தலைமுறையினருக்கு பி.வி. சிந்து சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில் ஐதராபாத்துக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது போட்டியில் தான் வென்ற பதக்கத்தையும் வெங்கையா நாயுடுவிடம் காண்பித்தார். பெரும் மகிழ்ச்சி அடைந்த வெங்கையா நாயுடு, பி.வி. சிந்துவை வெகுவாக பாராட்டினார்.

அப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறும் போது, நாட்டின் அனைத்து கல்வி திட்டத்திலும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டை ஒரு பாடத் திட்டமாக வைக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு பி.வி.சிந்து போன்றவர்கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் உள்ளனர். இதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து