முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தின கோலாகல கொண்டாட்டம்: சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தினர்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெத்லகேம், இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான நேற்று அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த இடமான பெத்லகேம் நகரில் இயேசு பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. நேட்டிவிட்டி சர்ச் என்றழைக்கப்படும் இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டம் மிக சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

அவ்வகையில், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நேற்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அந்த தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு நேர கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்தனர்.
அங்கு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ராட்சத கிறிஸ்துமஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக் மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர். இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் நேற்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயம், தூத்துக்குடி பனிமய மாதா ஆலையம், சென்னை சாந்தோம் தேவாலயம், சி.எஸ்.ஐ. சர்ச் மற்றும் மதுரை தூயமரியன்னை தேவாலயம், நரிமேடு சி.எஸ்.ஐ சர்ச், அண்ணாநகர் வேளாங்கண்ணி தேவாலயம், புதூர் மாதா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து