முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தனித்த மற்றும் கணக்கீட்டுக் கணித கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறையும் மற்றும் இராமானுஜன் உயர் கணித மையம் ஆகியன இணைந்து நடத்திய இரண்டு நாள் சர்வதேச “தனித்த மற்றும் கணக்கீட்டுக் கணித கருத்தரங்கம் 2018”; அழகப்பா பல்கலைக்கழகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
 47க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஆராய்சியாளர்கள்; இதில் கலந்து கொண்டனர். கணிதத் துறை பேரா.என்.அன்பழகன் அனைவரையும் வரவேற்றார்.   அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஹா.குருமல்லேஷ் பிரபு இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை ஆற்றினார்.  அவர் தமது உரையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோற்றம், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் பல்வேறு சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அமெரிக்க நாட்டின் ஒக்லாமா பல்கலைக்கழக பேரா. எஸ். லட்சுமிவராகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் இந்த சர்வதேச கருத்தரங்கு மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகவும் உலக கணிதத் துறை வல்லுனர்கள் ஒன்று கூடும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நிகழ்வாகவும் விளங்குவதாக தெரிவித்தார்.  அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறையும் இராமானுஜன் உயர் கணித மையமும் கணிதத்தில் அனைத்து துறையினருக்கும் பயன்படும் வகையில் சிறந்த ஆராய்சிகளில் ஈடுபட்டு வருவதை பெருமையுடன் கூறினார்.
 தைவான் துங்ஹாய் பல்கலைகழக பேரா. டாமிங் வாங் தனது வாழ்த்துறையில் இந்தியாவும், தைவானும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனித்த கணிதத்தில் சர்வதேச கருத்தரங்கத்தை 2009ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளும்; மாறி மாறி நடத்தி வருகிறது.  6வது கருத்தரங்கம் வருகிற ஆகஸ்ட் 2019ல் இந்தியாவில் நடக்கவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 ஹாலந்து நாட்டைச் சேர்ந்த பேரா. டான் க்ளாக்ஸ் (தேசிய பல்கலைக்கழகம், தைவான்) அவர்கள் தனது வாழ்த்துரையில் அனைவரும் கணிதத்தின் மகத்துவத்தையும் தன்மையையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார். கருத்தரங்க அமைப்புச் செயலர்; பேரா. அமுதா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து