முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் சுனாமி உயிரிழப்பு 429 ஆக அதிகரிப்பு

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஜகார்தா : இந்தோனேசியாவில் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் உள்ள சைல்டு எரிமலை கடந்த 23-ம் தேதி இரவு வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட சுனாமி பேரலைகள் மேற்கு ஜாவா, தெற்கு சுமத்ரா தீவுப் பகுதிகளின் கடற்கரையை தாக்கின. இதன் காரணமாக கடற்கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இடிந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து ராணுவம், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பு, சுனாமிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்க 429 ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த சுமார் 1,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 128 பேரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து